
புதுடெல்லி:மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் அஹ்மத் காஸ்மியின் நீதிமன்ற காவல் இம்மாதம் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தூதரக அதிகாரியின் கார் குண்டுவெடிப்பு வழக்கில் காஸ்மி கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி காஸ்மியின் போலீஸ் காவல் முடியும் முன்பே அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். காஸ்மியிடம் இதர புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்துவதற்கு மாஜிஸ்ட்ரேட் தடை விதித்துள்ளார்.
போலீஸ் காவலில் வைத்து தன்னிடம் மொஸாத் உள்ளிட்ட வெளிநாட்டு புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தியதாக காஸ்மி நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். காஸ்மி ஒரு ஈரான் நாட்டு பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை ஆவணங்களை டெல்லி போலீஸ் கைப்பற்றியது.
இஸ்ரேலுக்கு எதிராக கட்டுரைகள் எழுதிய காரணத்தால் டெல்லி போலீஸ் மர்மம் நீடிக்கும் இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு வழக்கில் காஸ்மியை பலிகடா ஆக்கியுள்ளது.
No comments:
Post a Comment