Tuesday, April 10, 2012

குஜராத்:இஷ்ரத் போலி என்கவுண்டர் கொலையை விசாரித்த சர்மா உள்பட 50 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி இடம் மாற்றம்


IPS officers transferred
அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு நிரபராதிகளை அநியாயமாக படுகொலைச் செய்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு உறுப்பினர் சதீஷ் சர்மா உள்பட 50 ஐ.பி.எஸ் அதிகாரிகளை குஜராத் மோடி அரசு பணி இடம் மாற்றம் செய்துள்ளது.
அஹ்மதபாத் சிட்டியில் ட்ராஃபிக்கில் கூடுதல் போலீஸ் கமிஷனராக பதவி வகித்த வர்மா, ஜுனகடில் போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக பணி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு பணி இட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எஸ்பி. ரேங்கில் உள்ள ஆறு ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி பதவி அளித்து பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
2002-ஆம் ஆண்டில் குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் வேளையில் சட்டம் ஒழுங்கை பேணுவதில் வீழ்ச்சியை ஏற்படுத்திய ஆர்.ஜே.சவானியும் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு வழஙகப்பட்டுள்ளார். 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளனர். டி.எஸ்.பி ரேங்கில் உள்ள ஏழு போலீஸ் அதிகாரிகள் பணி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மோடி அரசால் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ள சதீஷ் வர்மா, மோடியின் போலீசாரால் இஷ்ரத்  ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்டது போலியானது என்பதை கண்டறிந்த சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வேளையில் ஸவானி தனது பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் இனப் படுகொலைகளை கட்டுப்படுத்த தவறியதாக இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுக்கான ஜன சங்கர்ஷ் மஞ்ச் என்ற அமைப்பும் குற்றம் சாட்டியிருந்தன. தற்பொழுது மெஹ்ஸானா எஸ்.பியான ஸவானி ரெயில்வே டி.ஐ.ஜியாக  பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளார்.
2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வேளையில் ஸவானி துணை போலீஸ் கமிஷனராக பதவி வகித்தார்.

No comments:

Post a Comment