Sunday, April 8, 2012

உ.பி:காங்.தோல்விக்கு காரணம் இடஒதுக்கீடு – ராகுலின் புதிய கண்டுபிடிப்பு!


உ.பி -காங் தோல்விக்கு காரணம் இடஒதுக்கீடு - ராகுலின் புதிய கண்டுபிடிப்பு!
புதுடெல்லி:சிறுபான்மை இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 9 சவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிக்கைகளும், பாட்லா ஹவுஸ் என்கவுண்டரும் உ.பி மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணமானதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க நடந்த கூட்டத்தில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார். கட்சி ஒழுக்க கட்டுப்பாடுகளை கட்சியினர் மீறுவதை சும்மா பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார்.
மத்திய அமைச்சர்களின் இட ஒதுக்கீடு குறித்த அறிக்கைகள் குறித்து கூட்டத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதேவேளையில் கட்சியில் பொறுப்பாளர்கள் மாற்றம் நடைபெறும் என்று முன்னாள் எம்.பி ராஜேஷ் மிஷ்ரா கூறினார்.
உ.பி மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய அமைச்சர்களான சல்மான் குர்ஷித், பெனி பிரசாத் வர்மா, ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஷ்வால் ஆகியோர் முஸ்லிம்களுக்கு ஒன்பது சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவோம் என்று அறிவித்திருந்தனர்.

No comments:

Post a Comment