Sunday, April 8, 2012

ராத்தோர்:சிறையில் அடைக்கப்படும் 3-வது பா.ஜ.க எம்.எல்.ஏ!


Rajasthan BJP MLA Rajendra Rathore
ஜெய்ப்பூர்:தாராசிங் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ராத்தோர் சிறையில் தள்ளப்படும் 3-வது பா.ஜ.க எம்.எல்.ஏ ஆவார்.
மஹிபால் மதேர்ணா, மால்கான்சிங் பிஷ்ணோய் ஆகியோர் இதர இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆவர்.பன்வாரி தேவி என்ற நர்ஸ் காணாமல் போன வழக்கில் , மதேர்ணாவும், பிஷ்ணோயும் கைது செய்யபட்டனர். இரண்டு வழக்குகளின் விசாரணையும் சி.பி.ஐ தலைமையில் நடந்தது. சி.பி.ஐயை அரசியலுக்காக துஷ்பிரயோகம் செய்வதாக பா.ஜ.க குற்றம் சாட்டுகிறது.

No comments:

Post a Comment