Tuesday, August 25, 2015

முஸ்லிம் இளைஞர் ஆடையை களைந்து அடித்து உதைத்த இளைஞர்கள் - வீடியோ!

முஸ்லிம் இளைஞர் ஆடையை களைந்து அடித்து உதைத்த இளைஞர்கள் - வீடியோ!
மங்களூரு: முஸ்லிம் இளைஞர் ஒருவரின் ஆடையை களைந்து கம்பத்தில் கட்டி வைத்து இளைஞர்கள் சிலர் அடித்து உதைத்த சம்பவம் மங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூரில் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வரும் முஸ்லிம் இளைஞர் ஷகீர் (28) அதே சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வரும் இந்து மதப் பெண்ணிடம் மங்களூரு அவதார் சாலையில் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த கும்பல் , அந்த நபரை தரதரவென இழுத்துச் சென்ற கும்பல், அவரது ஆடைகளை களைந்து சாலையோரத்தில் இருந்த கம்பத்தில் அவரைக் கட்டி வைத்து அடித்தது.
பரபரப்பான சாலையில் இச் சம்பவம் நடந்தது. ஆனால், இதனை அங்கிருந்த யாரும் எதிர்க்கவில்லை. இது தொடர்பாக தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீஸார் அந்த நபரை மீட்டனர். பாதிக்கப்பட்ட நபர் மங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தாக்குதலில் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்த 13 பேரை கைது செய்ததாக மங்களூரு காவல்துறை ஆணையர் எஸ்.முருகன் தெரிவித்தார். மேலும், தப்பித்து ஓடிய 4 முக்கிய நபர்களை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் பஜ்ரங்தள் மற்றும் சங்பரிவார் அமைப்பினருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரபரப்பான சாலையில் நடைபெற்ற இச்சம்பவம் மங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment