
புதுடெல்லி: சன் குழுமத்திற்கான பாதுகாப்பு உரிமத்திற்கு மத்திய அமைச்சர்
அருண்ஜெட்லி ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பர் மாதம் சன் குழும சானல்களின் உரிமம் காலாவதியாகிவிட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் சன் குழும சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதலை மத்திய உள்துறை விவகார அமைச்சகம் மறுத்தது.
தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால், குற்றவழக்கு நடவடிக்கை காரணமாக தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு ஒப்புதல் மறுக்கப்பட்டதாக அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.
ஆனாலும், டெல்லி மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்கள் குழுமத்தை எப்.எம். ஏலத்தில் பங்கேற்க அனுமதி வழங்கியது. சன் குழுமம் இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
இந்த நிலையில் சன் குழுமம் தனது 33 சானல்களுக்கான பாதுகாப்பு ஒப்புதல் பெற , மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய அரசு இதற்கான அனுமதியை மறுக்கக் கூடாது என்று கோப்பு ஒன்றில் குறிப்பு எழுதியதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment