Saturday, February 14, 2015

பா.ஜனதா நிர்வாகி கொலை வழக்கு: கேரள மின்வாரிய பெண் ஊழியர் உட்பட 3 பெண்கள் கைது

திருவனந்தபுரம், பிப். 14–
ஆலப்புழா பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி வேணுகோபால்.
இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு சென்றபோது, மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஆலப்புழா போலீசார் வழக்குப்பதிவு செய்து வேணுகோபாலை கொன்றவர்கள் யார்? எதற்காக கொல்லப்பட்டார்? என்று விசாரித்தனர்.
அதன் விபரம்:–
ஆலப்புழா பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் சந்திரலால். கம்யூனிஸ்டு தொழிற்சங்க பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரை ஒரு கும்பல் வெட்டி கொன்றது. இந்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி வேணுகோபால் முக்கிய குற்றவாளி ஆவார்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட வேணுகோபால் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை பழிக்குப்பழி வாங்க சந்திரலாலின் மனைவி சுமிதா (வயது 28) முடிவு செய்தார். இதற்காக அவர் உறவுப்பெண்கள் கிரிஜா (42), ரெஜினி (33), கிரிஷ்மா (18) ஆகியோரின் துணையுடன் கூலிப்படையை ஏவி வேணுகோபாலை வெட்டி கொலை செய்தார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் சந்திரலாலின் மனைவி சுமிதா, கிரிஜா, ரெஜினி, கிரிஷ்மா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கைதான சுமிதாவுக்கு கணவர் இறந்ததால் கேரள மின்வாரியத்தில் வேலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment