Saturday, January 31, 2015

பிரிட்டிஷ் ஏர்வேஸ் பங்குகளை கத்தார் வாங்கியது: தீவிரவாத ஆதரவு நாடு என விமர்சனம்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை கத்தார் ஏர்வேஸ் 1.15 பில்லியன் பவுண்ட் கொடுத்து வாங்கியுள்ளது.

இது குறித்து சர்வதேச விமான சங்கத்தின் (ஐஏஓ) தலைமை நிர்வாகி வில்லி வால்ஷ் கூறுகையில், கத்தார் பிரிட்டிஷ் ஏர்லைன்சுக்கு நீண்ட கால ஆதரவு தரும் பங்குதாரராக இருக்க வேண்டுமென்றும், உலகின் முன்னணி விமான அமைப்பான ஐஏஓ-வின் குறிக்கோளை முன்னெடுத்து செல்ல கத்தாருடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் ஏர்வேஸின் மிகப்பெரிய பங்குதாரராகியுள்ள கத்தாரால் இங்கிலாந்தின் தேச பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு நாடான கத்தாருக்கு ஹமாஸ், ஐஎஸ், அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அவற்றிற்கு நிதி உதவி அளித்து வருவதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தின் முக்கிய அரசியல் பிரச்சாரகரான அலெக்ஸாண்டர் க்ரெய்க், “நம்முடைய தேசிய விமான சேவை நிறுவனத்தை தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்யும் ஒரு நாட்டிற்கு விற்பதன் மூலம் நாம் பகிர்ந்து கொள்வது முதலீட்டையா அல்லது நம் மதிப்பீடுகளையா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆனால், கத்தார் அரசோ இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

No comments:

Post a Comment