அம்மாண்: ஜப்பான் நாட்டுப் பிணைக் கைதியைக் காப்பாற்ற ஐ.எஸ். பெண் தீவிரவாதியை விடுவிக்க ஜோர்டான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
சிரியா நாட்டில் தங்கியிருந்த ஜப்பானியர்கள் ஹருணா யுகாவா, கெஞ்சி கோடோ ஆகியோரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்தனர்.
அவர்கள் கேட்ட பிணைத் தொகையை ஜப்பான் அரசு வழங்காததால் ஹருணா யுகாவின் தலையைத் துண்டித்து கொலை செய்தனர்.
ஜோர்டானை சேர்ந்த விமானி மாஷ்–அல்–கசாபே யையும் பிடித்து பிணைக் கைதியாக வைத்துள்ளனர்.
ஜோர்டானை சேர்ந்த விமானி மாஷ்–அல்–கசாபே யையும் பிடித்து பிணைக் கைதியாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஐப்பானின் மற்றொரு பிணைக் கைதி கெஞ்சிகோடோ மற்றும் விமானி கசாபே ஆகியோரை விடுவிக்க, ஜோர்டான் சிறையில் மரண தண்டனை கைதியாக இருக்கும் ஐ.எஸ். பெண் தீவிரவாதி சஜிதா அல்– ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும். அதுவும் 24 மணி நேரத்திற்குள் இது நடக்க வேண்டும் என ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து பெண் தீவிரவாதி சஜிதாவை விடுவிக்கும்படி ஜோர்டானிடம் ஜப்பான் அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.
அதைத் தொடர்ந்து பெண் தீவிரவாதி சஜிதாவை விடுவிக்கும்படி ஜோர்டானிடம் ஜப்பான் அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.
தங்களது மகன்களை உயிருடன் விடும்படி பிணைக் கைதிகளின் தாய்மார்கள் தீவிரவாதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment