சார்லி ஹெப்டோ என்று பிரெஞ்சு பத்திரிகை அலுவலகம் மீது பாரிசு நகரத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு சில தினங்கள் கழித்து பிரெஞ்சு திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான இஸபெல் மாத்திக் இஸ்லாத்தைத் தழுவியுள்ளதாக தனது முகநூலில் அறிவித்துள்ளார்.
ஜனவரி 11 அன்று இஸபெல் தனது முகநூலில் பதிவுச் செய்துள்ள பதிவில் ‘நான் இன்று இஸ்லாத்தின் முதல் தூணை நிலைநாட்டினேன். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹ்மமது (ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்’ என்று குறிப்பிட்டுள்ளார். (அந்த பதிவின் திரை நகல் இணைப்பில் காண்க)
தனது மதமாற்றம் குறித்து மேலும் பல தொடர்ச்சியான பதிவுகளை அவர் செய்துள்ளார். அவற்றில் ஒன்றில் மொரோக்கா செய்தித் தாள்களில் தனது அறிவிப்பை வெளியிட வைத்த மெரோக்கா நாட்டின் திரைப்பட நடிகர் ஹிகாம் பஹ்லூலுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தனது மற்றொரு பதிவில் இந்த முடிவை தான் எடுத்தது ஏன் என்பது குறித்து விவரித்துள்ளார். இந்த முடிவு கருத்துச் சுதந்திரம் குறித்த தனது நம்பிக்கையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து விவரித்துள்ளார்.
‘சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் நடைபெற்ற படுகொலைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நான் முஸ்லிமானேன்’ என்று இன்னொரு பதிவில் இஸபெல் குறிப்பிட்டுள்ளார்.
‘இன்னும் அனைவருக்கும் குறிப்பாக சார்லி ஹெப்டோவிற்கு கருத்துரிமை அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேனா?’ என்று கேட்டால் நான் ‘ஆம்’ என்று பதில் அளிப்பேன் என்று மற்றொரு பதிவில் இஸபெல் குறிப்பிட்டுள்ளார்.
‘இறைத்தூதர் குறித்த கேலி சித்திரங்களை பொறுத்த வரையில் எனது நிலைப்பாடு இது தான். இன்று காலை எனக்கு ஒரு பள்ளிவாசலில் இருந்து வந்த குறுந்தகவலை (எஸ்எம்எஸ்) உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டவை தான் எனது சிந்தனையாகவும் இந்த கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்ட காலத்திலிருந்து அதாவது நான் முஸ்லிமாவதற்கு முன்பிலிருந்து எனது கருத்தாக இருக்கின்றது’ என்கிறார் இஸபெல்.
அந்த குறுந்தகவலில்:
‘அவர்கள் முஹம்மதை கேலிச் செய்கிறார்கள். ஆனால் அதன் மூலம் அவர்களால் முஹம்மதிற்கு தீங்கிழைக்க இயலவில்லை. அவர்கள் கற்பனைச் செய்துக் கொண்ட ஒரு பாத்திரத்தை கிண்டலுக்கு இழக்காக்கியுள்ளார்கள். அந்த பாத்திரத்திற்கு அவர்கள் ஒரு பெயரை சூட்டியுள்ளார்கள். அந்த பாத்திரம் எங்கள் இறைத்தூதர் அல்ல’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தொடக்க கால வாழ்வில் இறைநம்பிக்கையில்லாதவர்கள் நபிகளாரின் இஸ்லாமிய அழைப்பை நிராகரித்ததை இஸபெல் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இஸபெல் தனது பதிவில் மேலும் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
‘மக்காவின் நிராகரிப்பாளர்கள் முஹம்மது புகழுக்குரியவர் என்ற நபிகளாரின் பெயரை திரித்து மொடாமாம் என்று கூறி அவர்களை கிண்டல் செய்தார்கள். இறைத்தூதர் இதனை கேட்டு சிரிப்பார்கள். ஆம் சிரிப்பார்கள். இது குறித்து ‘அவர்கள் மொடமாமமை கிண்டல் செய்கிறார்கள். என்னை அல்ல’ என்று நபிகாளர் குறிப்பிட்டதை பதிவுச் செய்கிறார் இஸபெல்
‘நபிகள் (ஸல்) அவர்களின் இந்த மதிநுட்பம் தான் உணர்ச்சிகளை தூண்டும் போது எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு சரியான பதிலாகும். இதனை தான் நமது நேசத்திற்குரிய இறைவனின் தூதர் (ஸல்) நமக்கு கற்பித்துத் தந்தள்ளார்கள். எனவே சார்லி ஹெப்டோ மீண்டும் பிரசுரமாகும் போது இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) அதனை கண்டுக் கொள்ளாதீர்கள். அதன் உணர்ச்சி தூண்டுதல்களுக்கு பதிலடி தராதீர்கள். அதற்கு எவ்வகையில் முக்கியத்துவம் அளிக்காதீர்கள்
‘அவர்களின் கொழுப்பை நமது மவுனம் கரைத்துவிடும்.’
என்றும் தனது முகநூலில் எழுதியிருக்கிறார் இந்த பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்

No comments:
Post a Comment