ஸூரிச்: உலக மகளிர் தினத்தில் முஸ்லிம் கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து விளையாட சர்வதேச கால்பந்து சங்கமான FIFA அனுமதி அளித்துள்ளது.இதன் மூலம் மைதானத்தில் ஹிஜாப் அணிவதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து அசோசியேசன் போர்டின்(ஐ.எஃப்.எ.பி) தீர்மானத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நீளும் வாத.பிரதிவாதங்களின் இறுதியில் விளையாட்டு மைதானத்தில் தலையை மறைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் சீக்கிய,யூத மதங்களைச் சார்ந்த வீரர்களும் மைதானத்தில் தலைப்பாகை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் வீராங்கனைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு FIFA இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு மைதானத்தில் ஹிஜாப் வழங்க சம்மதம்
தெரிவித்தது.ஆனால், சட்டரீதியான அனுமதி கிடைக்கவில்லை.ஜூன் 1-ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வரும்.முஸ்லிம் நாடுகள், இஸ்ரேல், சீக்கிய சமூகம் ஆகியவற்றிலிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இச்சட்டம் அமல்படுத்தியுள்ளதாக FIFAவின் பொதுச் செயலாளர் ஜெரோம் வால்கே தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஹிஜாப் அணிந்து விளையாடிய ஈரான் மகளிர் கால்பந்து அணியை FIFA தகுதியிழக்கச் செய்தது.இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
No comments:
Post a Comment