கியவ்: உக்ரைன் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ரஷ்ய ராணுவம் கிரீமியா சுயாட்சி பிரதேசத்தில் நுழைந்தது. அங்கு 16 ஆயிரம் வீரர்களை ரஷ்யா அனுப்பி வைத்ததாக முதலில் தகவல் வெளியானது.
ஆனால் இது 20 ஆயிரம் வீரர்களாக அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என்று இப்போது அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் கணித்துள்ளது.
இதனால் தங்களுக்கு ராணுவ தொழில்நுட்ப உதவி மற்றும் மனிதநேய உதவிகள் அளிக்கும்படி அமெரிக்காவிடம் யுக்ரேன் அமைச்சர் கேட்டுக்கொண்டார். அதுபற்றி விரைவாக ஆய்வு செய்ய அமெரிக்க முடிவு செய்துள்ளது.
அதேநேரத்தில் அமெரிக்காவின் பொருளாதார தடை மிரட்டலை கண்டு ரஷ்யா கொஞ்சமும் மிரளவில்லை. அதற்கு மாறாக கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மாஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, ‘ரஷ்யாவின் ஒரு பகுதி கிரீமியா’ என்று கோஷமிட்டனர். மேலும் இணைப்பு குறித்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்ற இருசபை தலைவர்களும் முடிவு செய்திருக்கிறார்கள். கிரீமியா பிரதேச சனத்தொகையில் 60 சதவீதம் பேர் ரஷ்யர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர கிரீமியா பகுதியில் இருக்கும் செவாஸ்தோபோல் துறைமுக நகரிலும் ரஷ்யாவின் ஆதரவு ஓங்கி வருகிறது. அங்குள்ள யுக்ரைன் ராணுவ தளத்தை ரஷ்யா ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. இந்த முகாமில் யுக்ரைனை சேர்ந்த 100 வீரர்கள் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment