Wednesday, January 22, 2014

தகுந்த ஆதாரமின்றி பொடாவில் கைதான முஸ்லிம்கள் விடுதலை!

புதுடெல்லி: தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் பொடாவில் கைதான மூன்று முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்தினார்கள் என்று குற்றம் சாட்டி பொடா  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்ஸூத், ஜாவேத், தாஜ் முஹம்மது ஆகிய 3 பேரை மொராதாபாத் நீதிமன்றம் விடுதலைச்செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த . 2002-ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்ட இவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற ஏற்கனவே உ.பி அரசு முடிவுச் செய்திருந்தது.ஆனால், அலகபாத் நீதிமன்றம் பெஞ்ச் மறுத்துவிட்டது.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை ஆஜர் படுத்துவதில் அரசு தரப்பு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment