Wednesday, January 22, 2014

நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தேசிய தலைவராக கர்நாடகாவின் ஷாஹிதா அஸ்லம் தேர்வு!

NWF
கோட்டக்கல் (கேரளா): நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் என்ற பெண்கள் அமைப்பின் புதிய தேசிய தலைவராக கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த ஷாஹிதா அஸ்லம் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். தேசிய பெண்கள் முன்னணி என்ற நேசனல் விமன்ஸ் ஃப்ரண்டின் 3-வது தேசிய பொதுக்குழு கூட்டம் கேரள மாநிலம் புத்தணத்தானி மலபார் ஹவுஸில் வைத்துநடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
அதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேசிய தலைவர் – ஷாஹிதா அஸ்லம் (கர்நாடகா)
தேசிய பொதுச் செயலாளர் – ஷீஃபா (தமிழ்நாடு)
தேசிய துணைத்தலைவர்கள் – அலீமா ஃபாத்திமா(தமிழ்நாடு), ஃபரீதா(கேரளா)
தேசிய பொருளாளர் – ஷாஹிதா தஸ்னீம்(கர்நாடகா)
தேசிய செயற்குழு உறுப்பினர்கள்:ஸைனபா அலி, ஷரீனா நஜீப், ஹபீபாஉஸ்மான்(கேரளா), ஆஸிய மர்யம்,ஸஃபியா (தமிழ்நாடு), நவ்ஷிரா (கர்நாடகா),ரிஹானா (கோவா), ஆதியா ஃபிர்தவ்ஸ் (டெல்லி).
சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா தேசிய தலைவர் எ.ஸயீத் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முஸஃபர் நகர் கலவரத்தில்பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வை உறுதிச் செய்தல், பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் வகுப்புவாத தடுப்பு மசோதாவை நிறைவேற்றுதல்,பெண்களின் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை எடுத்தல் ஆகிய தீர்மானங்கள் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்திற்கு முன்னாள் தேசிய தலைவர் ஷாஹிதா தஸ்னீம் தலைமை வகித்தார்.முன்னாள் பொதுச் செயலாளர் ஆஸியா மர்யம் அறிக்கை தாக்கல் செய்தார்.

No comments:

Post a Comment