Wednesday, January 22, 2014

அணுசக்தி ஒப்பந்த அமலாக்கத்தை துவக்கியது ஈரான்!


iranடெஹ்ரான்: வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்கும் வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த யுரேனியம் சுத்திகரிக்கும் பணியை ஈரான் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜெனீவாவில் நடைபெற்ற அணுசக்தி பேச்சுவார்த்தையின் போது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்காக மட்டுமே யுரேனியம் சுத்திகரிக்க ஈரான் ஒப்புக்கொண்டது.

அதனையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் கடந்த நவம்பரில் கையெழுத்தானது.இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.ஆனால் ஒப்பந்தத்தின்படி ஈரான் நடந்து கொள்ளும் என்று அமெரிக்கா கூறியது.
இந்நிலையில் வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அமலாக்கும் வகையில் 20 சதவீதம் யுரேனியம் சுத்திகரிக்கும் பணியை ஈரான் நிறுத்தியுள்ளதாக அந்த நாட்டு அரசின் தொலைக்காட்சி செய்திவெளியிட்டுள்ளது.நடான்ஸ் மையத்தில் உள்ள யுரேனியம் சுத்திகரிப்பு எரிபொருள் கலன்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் அணுகுண்டு தயாரிக்கும் பணியைக் கைவிடும் நடவடிக்கையை ஈரான் தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது. சர்வதேசஆய்வாளர்களும் அந்த நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவகின்றனர்.

No comments:

Post a Comment