Saturday, January 18, 2014

பயங்கர வெடிப்பொருட்கள் கடத்திய சுப்பையன், ஶ்ரீதர் ஆகிய இருவர் கைது!

தேனி: உத்தமபாளையத்தில் வெடிபொருட்கள் கடத்திய இருவரை
காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தமபாளையத்தில் பயங்கர வெடிபொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தமபாளையம் பகுதியில் வெடிபொருட்கள் கடத்தி வைத்திருப்பதாக கியூ பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது போடி பத்ரகாளி புரத்தைச்சேர்ந்த சுப்பையன், உத்தமபாளையத்தைச் சேர்ந்த
ஸ்ரீதர் ஆகிய இருவரும் 50 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் போன்ற வெடிப்பொருட்கள் வைத்திருந்ததாக தெரியவந்தது. அவர்களிடம் வெடிபொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்தனர். இவர்கள் எதற்காக வெடிபொருட்கள் கடத்தினார்கள். குடியரசு தினத்தை சீர்குலைக்கச்சதியா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வைகை அனிஷ்

No comments:

Post a Comment