தெற்கு மும்பையில் உள்ள மலபார் ஹில்ஸ் பகுதியில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த, ஷியாக்களின் ஒரு பிரிவினரான ‘தாவூத் போரா’ இன மக்களின் மூத்த தலைவர் டாக்டர் செய்யதினா முஹம்மது புர்ஹானுதீன். தனது 102-வது வயதில் நேற்று காலமானார்.
அவரது மரண செய்தியை அறிந்து ஏராளமான மக்கள் மலபார் ஹில்ஸ் வீட்டின் முன்னர் குவியத் தொடங்கினர். இன்று அதிகாலை 2 மணியளவில் மறைந்த மதத் தலைவருக்கு இறுதி மரியாதை நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ஒருவரையொருவர் முந்திச் செல்ல முயற்சித்ததில் நெரிசல் ஏற்பட்டு நெரிசலில் சிக்கி மிதிபட்டும், மூச்சுத் திணறியும் 18 பேர் பலியாகினர். மயக்கம் மற்றும் படுகாயமடைந்த மேலும் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment