Saturday, January 18, 2014

முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை தீவிரவாதிகளாக்கும் மீடியாக்களின் முயற்சி தோல்வி!

fake news-1
முஸஃபர்நகர்: சங்க்பரிவார-ஜாட் வகுப்புவாத வெறியர்கள் நடத்திய கலவரத்தால் பாதிக்கப்பட்டது ஒரு புறம், அகதிகள் முகாம்களில் அரசின் புறக்கணிப்பு இன்னொரு புறம் என துயரங்களை அனுபவித்து வரும் முஸஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை தீவிரவாதிகளாக்கும் சில மீடியாக்களின் முயற்சி தோல்வியை தழுவியுள்ளது.ஜோகியா கேடா மற்றும் லோயி முகாம்களில் இருந்து ரோஜுத்தீன், ஸாலிம் ஆகிய சகோதரர்கள் காணாமல் போனதாக ஜனவரி மாதம் 8-ஆம் தேதி தைனிக் ஜாகரன் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டது.

பாகிஸ்தான் தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர் – இ – தய்யிபா இயக்கம் முஸஃபர் நகர் முகாமில் உள்ளவர்களை தீவிரவாதத்தின்பால் தூண்டுவதாகவும், அதில் மேற்கண்ட சகோதரர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக டெல்லி போலீஸ் சந்தேகிப்பதாகவும் தைனிக் ஜாகரன் குற்றம் சாட்டியது. மீரட்டில் முன்னர்கைதுச் செய்யப்பட்ட இருவரும் முகாமில் தங்கியிருப்பவர்களை லஷ்கருக்கு ஆள்சேர்க்க முயற்சித்ததாகவும் டெல்லி போலீஸ் கூறியிருந்தது.சகோதரர்களான ரோஜுத்தீன், ஸாலிம் ஆகியோரை காணவில்லை என்று கூறும் தைனிக்ஜாக்ரன் பத்திரிகையில் இவ்வாறு செய்தி வெளியாகியிருந்தது:’
டெல்லி போலீஸ் உடனடியாக லோயியில் உள்ள முஸஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள முகாமிற்கு சென்று ரோஜுத்தீன் மற்றும் ஸாலிம் குறித்து விசாரித்தது. கலவரத்தின்போது இருவரும் லோயி முகாமில் இருந்ததாகவும்,பின்னர் இவர்கள் இருவரும் ஜோகியா கேடா முகாமிற்கு சென்றதாகவும்போலீஸுக்கு தெரியவந்தது.
ஆனால், ஜோகியா கேடாவில் இருந்து அவர்கள் எங்குசென்றார்கள்? என்பது தெரியவில்லை.’தைனிக் ஜாக்ரன் வெளியிட்ட இந்த கதையை ஹிந்தி பத்திரிகையான ஹிந்துஸ்தானும் வெளியிட்டது. இச்செய்தியை உறுதிச் செய்ய முகாம்களுக்கு நேரடியாக சென்ற டூசர்க்கிள் டாட் நெட்டின் செய்தியாளர் மேற்கண்ட பத்திரிகைகள் வெளியிட்ட செய்தி பொய் என்பதை கண்டறிந்தார்.
ரோஜுத்தீனும், ஸாலிமும் முகாமில்தான் உள்ளனர் என்பதை டூ சர்க்கிளின் செய்தியாளர் நடத்திய புலனாய்வில் தெரியவந்தது.லோயியில் தனது மனைவி, பிள்ளைகளுடன் ஸாலிம் வசித்து வருகிறார்.கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான முகாமை அரசு நீக்கம் செய்ததால் அருகில் உள்ளபகுதியில் ப்ளாஸ்டிக் கூடாரம் கட்டி ஸாலிம் தனது குடும்பத்தினருடன்தங்கியுள்ளார்.
அதே வேளையில், ரோஜுத்தீன் ஜோகியா கேடாவில் உள்ள முகாமில்தான் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.ரோஜுத்தீன் கூறியதாவது: நானும், எனது சகோதரனும் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.வாழ்க்கையில் மிகவும் பயங்கரமான துயரத்தை நாங்கள் சந்தித்தோம். எனக்கு வாசிக்க தெரியாது.முகாமில் உள்ள சிலர் தாம் என்னைக் குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வந்ததாக கூறினர்.அப்போதுதான் தெரியவந்தது.செய்தியில் கூறப்படும் காரியங்கள் குறித்து எனக்கு எவ்வித அறிவும் இல்லை என்று ரோஜுத்தீன் கூறினார்.
ஸாலிம் கூறியது: நான் லோயியில் எனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தங்கியுள்ளேன்.இத்தகையதொரு செய்தியைக் குறித்து எனக்கு தெரியாது.ஆனால்,நான் ஒருபோது முகாமை விட்டு வெளியேறவில்லை என்றார். ரோஜுத்தீனின் மூத்த மகன் தினமும் வேலைக்கு செல்கிறார்.அவருடைய இரண்டு பிள்ளைகளும் ஜோகியா கேடாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் பயிலுகின்றனர்.மூன்று வாரத்திற்கு முன்பு ரோஜுத்தீனின் மகனுடைய மனைவி முகாமில் வைத்து ஒரு குழந்தையை ஈன்றார்

No comments:

Post a Comment