Saturday, January 18, 2014

முஸஃபர் நகர்: கலவரக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு!


musafiமுஸஃபர்நகர்: உ.பி மாநிலம் முஸஃபர் நகரில் உள்ள பாக்பதில் நடந்த கலவரத்தின்போது ஒருவரை கொலைச் செய்த நான்கு பேர் மீது வழக்குப் பதிவுச் செய்ய மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவுச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி கலவரத்தில் மரணித்த கலீலின் மனைவி அளித்த புகாரின் பேரில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.
குற்றம் சாட்டப்பட்ட ஷோவிந்த், அனில், கல்லுசிங், கானா ஆகியோர் மீது ஏழு தினங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும் என்று போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பேருந்தில் பயணித்த தங்களை பாக்பதில் வைத்து ஒரு கும்பல் தாக்கியதுடன் தனது கணவரை கொலைச் செய்து கானலில் தள்ளியதாக கொல்லப்பட்ட கலீலில் மனைவி புகார் அளித்திருந்தார்.

ஆனால், போலீஸ் அவரதுபுகாரை ஏற்கவில்லை.இதனைத்தொடர்ந்து அவர் நீதிமன்றத்தை அணுகினார்.

No comments:

Post a Comment