Wednesday, January 22, 2014

அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரான்:சிரியா எதிர்கட்சிகள், அமெரிக்கா எதிர்ப்பு!

geneva
நியூயார்க்: ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்றால் அதில் கலந்து கொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சிக் கூட்டணி (கிளர்ச்சிக் குழு)எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்பப்பெற வேண்டும் என  அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சிரியா பிரச்னைக்கு தீர்வு காண அதிபர் பஷர் அல் அஸத் இடம்பெறாத மாற்று அரசு அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணியான “சிரியாதேசியக் கூட்டணி’ வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில்  ஜெனீவாவில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரானுக்கு ஐ.நா. அழைப்பு விடுத்தது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் செய்தியாளர்களிடம் கூறியது: சிரியா பிரச்னைக்கு உரிய தீர்வு காண ஆக்கப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இருப்பதாக ஈரான் உறுதி அளித்துள்ளது.  ஈரான்வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேசிய பிறகே அந்த நாட்டுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. சிரியாவில் மாற்று அரசு அமைக்க  உரிய ஆதரவு அளிப்பதாகஈரான் உறுதி அளித்துள்ளது என்றும் பான்-கீ-மூன் தெரிவித்தார்.ஆனால் ஈரானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்பப் பெறாவிட்டால்பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவோம் என்று சிரியா தேசியக் கூட்டணிகூறியுள்ளது.ஜெனீவா மாநாட்டில் பங்கேற்க நிபந்தனையின் அடிப்படையிலேயே ஈரானுக்கு பான்-கீ-மூன் அழைப்பு விடுத்திருப்பார் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் 2012ஆம் ஆண்டு  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிரியாவில் மாற்று அரசு அமைக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இக்கூட்டத்தில் அந்நாடு பங்கேற்க மேற்கத்திய வல்லரசு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

No comments:

Post a Comment