Wednesday, January 22, 2014

காபூலில் புதிய பெண் போலீஸ் தலைவர்!

kabul
காபூல்: ஆப்கான் தலைநகர் காபூல் மாவட்டத்தின் புதிய போலீஸ் தலைவராக கர்னல் ஜமீலா பயாஸ் பொறுப்பேற்றுள்ளார். மாவட்ட போலீஸ் தலைவராக பொறுப்பேற்கும் முதல் ஆப்கான் பெண்மணி 50 வயதான பயாஸ் ஆவார். இரவு, பகல் பணியாற்ற தனக்கு அச்சமில்லை என்று ஜமீலா பயாஸ் கூறுகிறார்.
ஐந்து லட்சம் மக்கள் வாழும் இம்மாவட்டத்தில் அதிபரின் மாளிகை, பல்வேறு அமைச்சகங்கள், மத்திய வங்கி, பங்குச் சந்தை, மக்கள் நெரிசல் மிக்க தங்கச் சந்தைகள் ஆகியன உள்ளன.ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவும் ஆப்கானில் இத்துறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது சிரமமான பணியாகும்.

No comments:

Post a Comment