Saturday, January 25, 2014

முஸஃபர் நகர்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மிரட்டல்!

முஸஃபர் நகர்: முஸஃபர் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வகுப்புக் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணிடம் வழக்கை வாபஸ் பெற மர்ம நபர் ஒருவன் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளான். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவனுக்கு மிரட்டல் வந்ததாக சமூக ஆர்வலர் ஹாஜி மான் அலீ தெரிவித்தார்.
இது குறித்து அப்பெண்மணியின் கணவர் மாநில அரசுக்கு புகார் அளித்துள்ளார். கூட்டு பாலியல் வன்புணர்வு தொடர்பான ஐந்து வழக்குகளில் 22 பேரை கைது செய்ய நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment