
புதுடெல்லி: கடந்த 13 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டாத ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையை வராக்கடனாக வங்கிகள் தள்ளுபடிச் செய்துவிட்டதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி.சக்ரவர்த்திதெரிவித்துள்ளார்.
மத்திய அரசு விவசாயிகளின் 60 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடிச் செய்ததாக 2008-ஆம் ஆண்டு பெருமை பேசியது. ஆனால், கார்ப்பரேட்டு கம்பெனிகள் கட்டாமல் வங்கிகளுக்கு டிமிக்கு கொடுத்த தொகை ஒரு லட்சம் கோடியாகும். தள்ளுபடிச் செய்த கார்ப்பரேட் கடன்களில் 95 சதவீதமும் பெரிய கம்பெனிகளுடையது. ஆனால் எல்லோரும் விவசாய கடனை தள்ளுபடிச் செய்ததுகுறித்து கவலைப் படுகின்றனர் என்று சக்ரவர்த்தி கூறுகிறார்.
‘திரும்ப வராது என்று உறுதிச் செய்த கடன்களை தள்ளுபடிச் செய்து செயல்தன்மை இல்லாத சொத்துக்களை வங்கிகள் குறைப்பது வழக்கம்.2007-13 காலக் கட்டத்தில் 4,94,836 கோடி ரூபாய் கடன்களை வங்கிகள் செயல் திறன் இல்லாத சொத்துக்கள் என்று மாற்றிவிட்டன. கார்ப்பரேட் கடன்களை கண்காணிக்க இந்தியாவில் தனியாக எவ்வித கட்டமைப்பும் இல்லை.2007-13 காலக்கட்டத்தில்இந்தியாவில் 10 பெரிய கார்ப்பரேட்டுகளின் கடன் மட்டும் 10 மடங்கு அதிகரித்துள்ளது’ என்று சக்ரவர்த்தி மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment