சென்னை: சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதை எதிர்த்து சென்ன உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டில் சாதனை படைத்தமைக்காக சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சச்சின் விருதுக்கு தேர்வு செய்தது குறித்து பலதரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் கனகசபை என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் "பாரத ரத்னா விருதிற்கான தேர்வில் மத்திய அரசு, விதிமுறைகள் எதையும் முறையாக பின்பற்றவில்லை எனவே சச்சின் மற்றும் சி.என்.ராவ்விற்கு வழங்கப்படவுள்ள பாரத ரத்னா விருதை தடை செய்ய வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் வரும் திங்களன்று விசாரணைக்கு வருகிறது.
சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் அமிதாப் தாகூர் என்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment