
கெய்ரோ:அநியாயமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், ராணுவத்தை ஆதரிப்பவர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் ஐந்து பேர் பலியானார்கள். நைல் நதியையொட்டிய மன்சூரா நகரத்தில் நான்கு பெண்களும், ஒரு குழந்தையும் கொல்லப்பட்டுள்ளனர்.துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்தில் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்று முன் தினம் முர்ஸியை ஆதரித்து எகிப்தின் நகரங்களில் பேரணி நடத்தினர். கொல்லப்பட்டவர்களும், காயமடைந்தவர்களும் முர்ஸியின் ஆதரவாளர்கள் ஆவர்.அதேவேளையில், புதிய அரசுக்கு எதிரான போராட்டத்தை அடக்கி ஒடுக்குவோம் என்று ராணுவ சர்வாதிகார அரசு மிரட்டல் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment