Wednesday, July 31, 2013

இஸ்லாமியர்களை அழைத்து இந்துக்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இந்து மதத்தை
சேர்ந்த சகோதரர்கள் இஸ்லாமியர்களை ஒன்று கூட்டி இஃப்தார் நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
முத்துப்பேட்டை ஜாம்புவோனோடையை சேர்ந்த ஆத்மநாதன் மற்றும் உப்பூரை சேர்ந்த வீரசேகரன் ஆகிய இருவரும் இஸ்லாமியர்களை அழைத்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தி மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்துள்ளனர்.
கடந்த மூன்று வருடங்களாக இவ்விருவரும் தங்களது சொந்த செலவில் இந்நிகழ்ச்சியை நடத்தி வருவதாகக் கூறப் படுகிறது.

மூன்றாவது வருடமான இப்தார் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது இதில் முத்துப்பேட்டையை சேர்ந்த இஸ்லாமியர்கள் சுமார் 500 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு இஃப்தார் நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment