Wednesday, July 31, 2013

நிதிஷ் குமார் பிரதமர் பொறுப்புக்குப் பொருத்தமானவர் : சத்ருகன்

அடுத்த மக்களவை தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர்
வேட்பாளராக பாஜக முன்னிறுத்துவதற்கு அக்கட்சியிலேயே எதிர்ப்பும் பூசல்களும் எழுந்தன.
குறிப்பிடத்தக்க இந்தி நடிகரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா "மோடிக்காக அத்வானியை நிராகரிக்க முடியாது" என்று கலகக் குரல் எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் பீகார் மாநில முதல்வரும், மோடியின் தேசிய பிரவேசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டவருமான நிதிஷ் குமாரைப் புகழ்ந்து, பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று சத்ருக்கன் சின்ஹா கூறியுள்ளார்.

"நாங்கள் (பாஜக-ஐக்கிய ஜனதா தளம்) பிரிந்துள்ளோம் என்பது உண்மை தான். ஆனால் எப்போதுமே பிரிந்து இருப்போம் என்று சொல்ல முடியாது"  என்று கூறியுள்ள சத்ருக்கன் " நாட்டில் உள்ள சிறந்த மற்றும் வெற்றிகரமான முதல்வர்களில் ஒருவரான நிதிஷ்குமார் பிரதமராகப் பொருத்தமானவர். ஒருவரை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுப்பது கட்சியும், தேர்தலில் கிடைக்கும் வாக்குகளும் தான். தேர்தலுக்குப் பிறகும் தே.ஜ.கூட்டணிக்கும், ஐ.மு.கூட்டணிக்குமிடையே நிதிஷ் பாலமாக இருப்பார்" என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழுவில் சத்ருக்கன் சின்ஹாவுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதும் இங்கு சொல்லத் தக்கது.

No comments:

Post a Comment