Wednesday, July 31, 2013

இதுவும் பொய்தானா? - கு.காந்தி ராஜா

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா வழங்கக் கூடாது
என்று அந்நாட்டு அதிபர் ஒபாமாவிற்கு இந்திய எம்.பி.க்கள் சிலரால் கையெழுத்திடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதத்தில்
தலைமைக்கு தெரியாமல் தி.மு.க. எம்.பி.க்கள் யாராவது கையெழுத்திட்டிருந்தால் அவர்கள் மீது நடவைக்கை எடுக்கப்படும் என்று கருணாநிதி 25/7/13 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஒபாமாவிற்கு அனுப்பட்டிருக்கும் கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கும் இந்திய எம்.பி.க்களின் கையெழுத்து உண்மையானதுதான் என்று அமெரிக்காவிலிருந்து வெளியாகியிருக்கும்
தடயவியல் அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் அக்கடிதத்தில் தாங்கள் கையெழுத்திடவில்லை கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் மறுத்தது பொய்யானது என்று நிரூபணமாகியிருக்கிறது.
அக்கடிதத்தில் தி.மு.க.வைச் சார்ந்த ஜின்னா, தங்கவேலு, கே.பி.இராமலிங்கம் என்ற 3 ராஜ்யசபா எம்.பி.க்களும், ரித்திஷ், தாமரைச் செல்வன் என்ற 2 மக்களவை எம்.பி.க்களும் கையெழுத்திட்டிருக்கின்றனர்.
கருணாநிதி 25/7/13 அன்று தான் சொன்னபடி மேலே கண்ட இந்த எம்.பி. க்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா ..? அல்லது தினசரி வழக்கமாய் வரும் அவரது அறிக்கைகள் போல அந்த அறிக்கையும் பொய்யான வெற்றுவேட்டு அறிக்கைதானா ..?
அல்லது கருணாநிதிக்கு தெரிந்துதான் தி.மு.க. எம்.பி.க்கள் மோடிக்கு விசா கொடுக்கக் கூடாது என்ற கடித்தத்தில் கையெழுத்திட்டார்களா..? மோடி ஆட்சிக்கு வந்துவிட்டால் தன் குடும்பத்தினர் மீதிருக்கும் 2ஜி ஊழல் விவகாரம் தீவிரமடைந்து விடும் என்று பயந்து போய் கருணாநிதி பா.ஜ.க.வை தாஜா செய்ய அந்த அறிக்கையை வெளியிட்டாரா ..?

No comments:

Post a Comment