Friday, July 26, 2013

அமார்த்ய சென் இந்தியரே இல்லை : சு.சுவாமி


மோடியை ஏற்க இயலாது என்று கருத்துத் தெரிவித்த பொருளாதார நிபுணர் அமார்த்ய சென் இந்தியரே இல்லை என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
மோடியை விமர்சித்ததற்காக அமார்த்ய சென்னுக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜகவினர் பேசத் தொடங்கியுள்ளனர். அவர்களினும் ஒருபடி மேலே சென்று பேசியுள்ள சு.சுவாமி "அமார்த்ய சென் இந்தியரே இல்லை" என்று விமர்சித்துள்ளார்.
சுவாமி , "அமர்த்யா சென் ஓர் இந்தியரே அல்லர்.
அவர் தன் வங்காள மனைவியை கைவிட்டு விட்டு இரு வெளிநாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்டவர். அமர்த்யா சென் வெளிநாட்டில் வசிப்பவர். அவ்வப்போது இந்தியா வருவார். அதனாலேயே அவர் இந்தியராகிவிட முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்திலே அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்தாலும் அவரிடம் இருந்து அதை பறிக்க வேண்டும், ஒரு நிபுணர் என்பதற்காக இந்தியாவுக்கு எதிராகக் கருத்து சொல்லக்கூடாது. அவருக்கு எதிரான எதிர்வினைகளைக் கொண்டாட வேண்டும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment