Friday, July 19, 2013

இந்தியரைத் தாக்கிய அரபியரை படம்பிடித்தவர் கைது!

துபை: ஐக்கிய அரபு அமீரகம் துபாய் சாலையில் சென்றுகொண்டிருந்த கார்மீது இந்திய ஓட்டுனரின் மினிவேன் மோதியதால்கோபமடைந்த அரபியர்,அவரை நடுரோட்டில் தாக்கினார்.
இந்தச்சம்பவம் செல்போன் கேமராவில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைத்தலங்களில் விவாத அலைகளைக் கிளப்பியதோடு, ஓட்டுநரைத் தாக்கிய அரபியரை துபாய் காவல்துறை உடனடியாகக் கைது செய்தது.
இந்நிலையில், இத்தகைய குற்றத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்பதாலும், தாக்குதலுக்கு முன்விரோதமோ உள்நோக்கமோ இல்லை என்பதாலும் உணர்வு வயப்பட்டதற்காக அரபியருக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்று
அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருனதனர். எனினும், பாதிக்கப்பட்டவர் இதுகுறித்து புகார் செய்யக்கூடும் என்பதால் தாக்குதல் நடத்திய அரபியர்மீது காவல்துறை சட்டநடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை கேமராவில் படம்பிடித்தது தனியுரிமை மீறல் என்பதாலும், சைபர் குற்றவகையைச் சார்ந்ததாலும் அதைப் படம்பிடித்து சமூக வலைத்தலங்களில் அனுமதியின்றி பரப்பியவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துபாய் காவல்துறை அறிவித்திருந்தது. அதன்படி, காணொளியைப் பதிவு செய்தவரை துபாய் காவல்துறை கைது செய்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டெபுடி கமாண்டர் மற்றும் துபாய் காவல்துறை தலைவருமான மேஜர் ஜெனரல் கமீஸ் மதார் அல் மஸீனா, சாலை விபத்து போன்ற சம்பவங்களைப் படம்பிடிப்பது அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அதனை காவல்துறையிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். தவிர,சமூக வலைத்தலங்களில் அனுமதியின்றி பரப்புவது துபாய் சைபர் குற்றங்கள் தடுப்புச் சட்டப்படி தண்டனைக்குரிய செயல் என்று தெரிவித்தார்.

இந்தச்சம்பவம் குறித்த இருதரப்பினரின் வழக்கும் காவல்துறை மட்டத்திலேயே இருப்பதால், இன்னும் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சமரசமாகும் பட்சத்தில் வழக்குகள் திரும்பபெறப்பறும் வாய்ப்புள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment