மாஸ்கோ:அமெரிக்க உளவு ஸ்தாபனங்களின் ரகசிய செயல்பாடுகளை அம்பலப்படுத்திய சி.ஐ.ஏவின் முன்னாள் தொழில்நுட்ப பணியாளர் எட்வர்ட் ஸ்நோடனைஅமெரிக்காவிடம் ஒப்படைக்கமாட்டோம் என்று ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ரகசிய புலனாய்வு அதிகாரிகள் ஸ்நோடனிடம் விசாரணை நடத்தவில்லை என்று புடின் கூறியுள்ளார்.மாஸ்கோ விமானநிலையத்தில் ட்ரான்ஸிட் பிரிவில் ஸ்நோடன் இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து புடினின்அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூன்று தினங்கள் ஸ்நோடன் இங்கிருப்பார் என்று ரஷ்யாவின் தேசிய விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்நோடனும், அவரது வழக்கறிஞர் ஸாரா ஹாரிஸனும் விரைவில் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று செய்தி வெளியானது.ஞாயிற்றுக் கிழமை ஸ்நோடன் ஹாங்காங்கில் இருந்து மாஸ்கோ விமானநிலையத்திற்கு வந்த பின்னர் வெளியே வரவில்லை. ஈக்வடார் நாட்டிடம் அவர் அரசியல் புகலிடம் கோரியுள்ளார்.இதற்கானபதிலை அவர் காத்திருக்கிறார்.கியூபாவுக்கு ஸ்நோடன் செல்வதாகவும் சில செய்திகள் வெளியாகின.ஸ்நோடனை கண்டால் உடனடியாக கைதுச் செய்து தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று அனைத்து நாடுகளிடமும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளையில், ஸ்நோடனுக்கு புகலிடம் அளிப்பதுக் குறித்து பரிசீலித்து வருவதாக வெனிசுலா அதிபர் நிகோலஸ் மத்யூரா தெரிவித்துள்ளார். மனிதநேயத்தின்அடிப்படையில் அவருக்கு புகலிடம் அளிக்க உத்தேசிப்பதாக ஹெய்திக்கு வந்த மத்யூரா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment