Sunday, January 13, 2013

கையூட்டுச் செய்தி(paid news):புதிய நெறிமுறைகளை வகுக்க ப்ரஸ் கவுன்சில் பரிந்துரை!


கையூட்டுச் செய்தி(paid news)-புதிய நெறிமுறைகளை வகுக்க ப்ரஸ் கவுன்சில் பரிந்துரை!
புதுடெல்லி:பத்திரிகைகளுக்குப் பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்யும் (பெய்டு நியூஸ்) நடைமுறையைக் கட்டுப்படுத்த புதிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் ஆலோசனை கூறியுள்ளது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, பெய்டு நியூஸ் குறித்து ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ஒரு குழுவை அமைத்தார். நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழு, குஜராத்தில் பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்யும் சம்பவங்களை ஆராயுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை வெள்ளிக்கிழமை பிரஸ் கவுன்சிலிடம் சமர்ப்பித்தது.
அதில் பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பெய்டு நியூஸ் செய்திகளை வெளியிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் எந்தச் செய்திகளை எல்லாம் இந்தப் பிரிவில் சேர்க்கலாம் என்பதை விளக்கும் நெறிமுறைகளை பிரஸ் கவுன்சில் உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
இது, தேர்தல் ஆணையத்துக்கும் அதிகாரிகளுக்கும் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ள அக்குழு, தேர்தல் நடக்கும் காலகட்டத்தில் ஊடகக் கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment