
புதுடெல்லி:ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்(AFPSA) ஜனநாயகத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் எதிரானது என்று தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ராணுவம் மற்றும் போலீசுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்காமலிருக்க அப்ஸா சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்ற நீதிபதி வர்மா கமிஷனின் பரிந்துரைகள் குறித்து பதிலளிக்கையில் ஹபீபுல்லாஹ் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது: அப்ஸாவை வாபஸ் பெற முடியாவிட்டால் ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் உள்ள பழுதுகளை நீக்கவேண்டும். கஷ்மீர் பள்ளத்தாக்கிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அப்ஸா வாபஸ் பெறுவது தொடர்பான எந்த தீர்மானமும் ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே மேற்கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment