Monday, January 7, 2013

வழக்குபதிவுச் செய்ய மறுத்தால் சஸ்பெண்ட் – போலீசாருக்கு உள்துறை செயலாளர் எச்சரிக்கை!


Union home secretary RK Singh
புதுடெல்லி:ஒருவர் புகார் அளிக்க வரும்போது அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் போலீஸார் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: புகார் அளிப்பதற்கோ அல்லது தாங்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ளவோ காவல் நிலையத்தை பொதுமக்கள் எளிதில் அணுக முடியாது என்ற நிலை உள்ளது. போலீஸாரின் மோசமான செயல்பாடுகளைத் தவிர வேறு ஏதுவும் இதற்குக் காரணமாக இருக்க முடியாது.
புகாரைப் பதிவு செய்ய மறுக்கும், புகார் குறித்த தகவல்களை முறையாகத் தெரிவிக்காமல் இருக்கும் போலீஸார் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கலாம். புகாரை பதிய மறுப்பது சட்டவிரோதமாகும். முக்கியமாக பெண்களும், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களும் அளிக்கும் புகார்களை பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வருபவர்களை கண்ணியமாக நடத்த போலீஸார் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்.கே. சிங் கூறினார்.

No comments:

Post a Comment