Thursday, January 31, 2013

முஸ்லிம் அமைப்பு நீதி கேட்டு நெடும் பயணம்!


முஸ்லிம் அமைப்பு நீதி கேட்டு நெடும் பயணம்!சென்னை: இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி நீதி கேட்டு நெடும் பயணம் என்ற பெயரில் இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற முஸ்லிம் அமைப்பு யாத்திரை கிளம்பியுள்ளது.
இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தரவேண்டும், ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவித்துவரும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்கவேண்டும், கட்டாயத் திருமண பதிவு சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி ஜமாத்துகளின் திருமணப் பதிவை அப்படியே அங்கீகரிக்க வேண்டும், ஆக்கிரமிக்கப் பட்டுள்ள வக்ப் சொத்துக்களை மீட்டு முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும், பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இன்று 12 மணியளவில் சென்னை ஆட்சியர் முஸ்லிம் அமைப்பு நீதி கேட்டு நெடும் பயணம்!அலுவலகத்திலிருந்து நீதி கேட்டு நெடும் பயணம் என்ற பெயரில் அந்த அமைப்பின் தலைவர் பாக்கர் தலைமையில் யாத்திரை துவங்கியுள்ளது.

முஸ்லிம் அமைப்பு நீதி கேட்டு நெடும் பயணம்!முன்னதாக, சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்னிலையில் நடந்த துவக்க நிகழ்ச்சியில், இந்திய மக்கள் கட்சியின் தலைவர் தேவநாதன், அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ்.மணி, ஆர்.கே.முஹைதீன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தி, யாத்திரையை வாழ்த்தி அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் முஹைதீன் ஐந்து கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சையினால் தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், மேல் முறையீட்டு வழக்கின் மூலம் விஸ்வரூபத்திற்குத் தடை நீடிக்கப்பட்டால் நீதி கேட்டு நெடும் பயணம் தொடரும் என்றும், தடை நீக்கப்படுமேயானால் நெடும் பயணம் கண்டன ஆர்ப்பாட்டங்களாக மாற்றப்படும் என்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர் கூறினார்.
- தகவல் அபூ ஃபைஸல்

No comments:

Post a Comment