Monday, June 11, 2012

மோடி ஒரு அரசியல் பயங்கரவாதி – குஜராத் காங். தலைவர் கடும் தாக்கு!


Narendra Modi a political terrorist- Congress
சூரத்:முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை அரசியல் பயங்கரவாதி என்று குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அர்ஜூன் மோத்வாடியா வர்ணித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடந்த கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு மூழ்கி கொண்டிருக்கும் கப்பல், அது மீள்வதற்கு வாய்ப்பில்லை என்று கடுமையாக சாடியிருந்தார். இதற்கு பதிலளித்த மோத்வாடியா, அரசியல் அரங்கில் மோடி ஓர் பயங்கரவாதி என குறிப்பிட்டார்.
மாலையில் சூரத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்தும்பொழுது மோத்வாடியா கூறுகையில், ‘மோடி தனது பரம எதிரியான சஞ்சய் ஜோஷியை கண்டு அஞ்சுவதால், அவரை நீக்க பா.ஜ.க தலைமைக்கு கடுமையான அழுத்தம் கொடுத்தார். இதன் காரணமாகவே சஞ்சய் ஜோஷி கட்சியை விட்டு விலகினார்’ என்று குறிப்பிட்டார்.
வருகிற டிசம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே அறிக்கைப்போர் சூடுபிடித்துள்ளது.

No comments:

Post a Comment