
ராஞ்சி:பிரதமர் மன்மோகன்சிங், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு கொலை மிரட்டலை இ-மெயில் மூலம் அனுப்பிய ஐ.ஐ.டி இன்ஜினியர் அனுராக் கைஷ்யாப் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2-ம்தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தின் ஆரியானாவிலிருந்து பைதைஹி என்ற பெயரில் இமெயில் வந்தது. இதில் பிரதமர், மற்றும் மத்தியஉள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் விசாரணையில் இறங்கினர். அப்போது குறிப்பிட்ட இமெயில் அனுப்பப்பட்டிருந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த அனுராக் கைஷ்யாப் என்ற ஐ.ஐ.டி. இன்ஜினியரிங் படித்தவர், அவரது உறவினர் ரமேஷ் ஷர்மாவி்ற்கு ஓய்வூதிய பணப் பலன்களை அளிக்காததை கண்டித்துதான் இ-மெயில் மிரட்டல் விடுத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இவர் மணீஷ் ஷர்மா என்ற போலி இமெயில் கணக்கிலிருந்து அனுப்பியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் கைஷ்யாப்பை கைது செய்தனர். மேலும் குறிப்பிட்ட ரமேஷ் ஷர்மா என்ற நபர் இல்லாததும் தெரியவந்தது.
தனது அண்டை வீட்டுக்காரரை போலீசில் சிக்கவைக்கவே அவர் இவ்வாறு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். காரக்பூர் ஐஐடி பொறியாளரான இவர் அமெரிக்கா மற்றும் மும்பையில் 5 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 7-ஆம் தேதி இந்த இ-மெயில் அனுப்பப்பட்ட சைபர் கஃபே உரிமையாளர் ஆதிப் ஹஸனை போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த இ-மெயில் செய்தியை அனுப்பியவர் முஸ்லிமாக இருந்திருந்தால் அவர் மீது இந்திய முஜாஹிதீன் அல்லது ஹுஜி அல்லது ஏதேனும் இயக்கத்தின் உறுப்பினர் பட்டம் சூட்டி பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புபடுத்தி சிறையில் அடைத்து அவரது வாழ்க்கையை இந்திய பாதுகாப்பு ஏஜன்சிகள் சீர்குலைத்திருப்பார்கள்.
அனுப்பியவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் அண்டை வீட்டுக்காரரை சிக்கவைக்க இ-மெயில் மிரட்டல் விடுத்தார் என போலீசார் கூறுகின்றனர்.
courtesy : www.thoothuonline.com
No comments:
Post a Comment