Sunday, June 10, 2012

ராம்தேவ் போன்ற மோசடிப் பேர்வழிகள் பொதுவாழ்வில் நீண்டகாலம் நீடிக்க முடியாது-திக்விஜய்சிங்!


போபால்:பாபா ராம்தேவ் போன்ற மோசடிப் பேர்வழிகள் பொது வாழ்வில் நீண்ட காலம் நிலைத்திருக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
ராம்தேவ் குறித்து திக்விஜய்சிங் கூறியது:எனது வாழ்நாளில் இவரைப் போல பல மோசடிப் பேர்வழிகளைப் பார்த்துள்ளேன். இப்போது பாபா ராம் தேவுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பதால் அவர், வெளிச்ச உலகில் பிரகாசமாக பவனி வருகிறார். ஆனால் இவரைப் போன்றவர்களால் சமூகத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.
ஏற்கெனவே அமலாக்கத் துறை ரூ. 80 கோடி வருமானத்துக்கு விளக்கம் அளிக்குமாறு ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றார் திக்விஜய் சிங்.

No comments:

Post a Comment