Friday, June 8, 2012

ஃபஸீஹின் வழக்கறிஞருக்கு மிரட்டல்!


புதுடெல்லி:பீகாரைச் சார்ந்த இளம் முஸ்லிம் பொறியாளர் ஃபஸீஹ் மஹ்மூதின் சட்டவிரோத கஸ்டடிக்கு எதிராக அவரது மனைவி நிகாத் பர்வீனுக்கு வேண்டி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் நவ்ஷாத் அஹ்மத் கானுக்கு வழக்கிலிருந்து வாபஸ் பெற மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஃபஸீஹின் வழக்கில் இருந்து வாபஸ் பெறவேண்டும். இல்லையெனில், எதிர் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்குமாறு வழக்கறிஞர் நவ்ஷா அஹ்மத் கானின் மொபைலில் மிரட்டல் வந்துள்ளது.
ஃபஸீஹ் மஹ்மூதிற்கு எதிரானது என கூறும் ஆவணங்களை வழக்கறிஞர் நவ்ஷாத், கர்நாடகா மாநில போலீசாரிடமிருந்து வாங்கிய பிறகு இம்மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று நிகாத்தின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment