
புதுடெல்லி:அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு சலுகை பெற்றோருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மன்மோகன்சிங் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 23-ஆம் தேதி பிரதமரின் வீட்டில் வைத்து இக்கூட்டம் நடைபெறும்.
பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி, ஒ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிப்பது உள்ளிட்ட காரியங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாகும்.
கடந்த வாரம் மாநிலங்களவையில் இதுக் குறித்து விவாதம் நடந்தபொழுது இதற்காக மசோதா இயற்ற அனைத்துக் கட்சிகளும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தன.
அதேவேளையில், பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டை வழங்கினால், கூடுதல் சேவை(சர்வீஸ்) புரிந்த நபர்களுக்கு மேலாக சர்வீஸ் குறைந்த இடஒதுக்கீட்டு சலுகைப் பெற்றவர்கள் இடம்பிடிப்பார்கள் என்றும், எனவே இந்நடவடிக்கை சரியல்ல என்றும் சில எம்.பிக்கள் கருத்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment