
போபால்:முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில்ஜோஷியின் கொலை வழக்கில் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதியும் சன்னியாசினியுமான பிரக்யாசிங் தாக்கூரிடம் விசாரணை நடத்த மத்தியபிரதேச மாநில உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், பிரக்யாசிங்கின் வழக்கறிஞர் முன்னிலையில் மட்டுமே விசாரணைச் செய்யவேண்டும் என்று நீதிபதிகளான ராஜேஷ் சக்ஸேனாவும், எஸ்.ஸி.சின்ஹாவும் அடங்கிய டிவிசன் பெஞ்ச் கூறியுள்ளது.
புலனாய்வு குழுவினர் போபாலில் வைத்து பிரக்யாசிங்கிடம் விசாரணை நடத்துவார்கள். முன்னர் சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் பிரக்யா சிங்கிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏவுக்கு அனுமதி வழங்கியிருந்தது. ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், மத்தியபிரதேச மாநில போலீஸ் குற்றப்பத்திரிகை தயார் செய்த வழக்கில் மீண்டும் என்.ஐ.ஏவை விசாரணை நடத்த அனுமதிக்க கூடாது என கோரி பிரக்யா சிங் மத்தியபிரதேச மாநில உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
இதனைத் தொடர்ந்து நடவடிக்கை தாமதமானது. மஹராஷ்ட்ரா மாநிலம் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரக்யாசிங்.
No comments:
Post a Comment