Sunday, May 20, 2012

ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை நிறுவ இஸ்ரேலுக்கு பெண்டகன் ஏழு கோடி டாலர் கூடுதல் நிதியுதவி!


U.S. To Provide $680 Million For Israel's Anti-Missile System
வாஷிங்டன்:இஸ்ரேலுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை நிறுவ ஏழு கோடி டாலர் கூடுதல் நிதியுதவியை வழங்க பெண்டகன் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டா அறிவித்துள்ளார். இதுக்குறித்த கோரிக்கையை அமெரிக்க காங்கிரஸிற்கு விரைவில் கொண்டு செல்லவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக்குடன் பெண்டகன் தலைமையகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பனேட்டா இதனை தெரிவித்தார்.
ஏவுகணை, ராக்கெட் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு நிறுவப்படுகிறது. இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிச்செய்ய ஒபாமா அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று குடியரசு கட்சி குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் கூடுதல் நிதியுதவியை இஸ்ரேலுக்கு அளிக்க பெண்டகன் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேல் அரசுக்கு சொந்த நாட்டு குடிமக்களை பாதுகாப்பது அத்தியாவசியம் என்பதால் இந்த உதவி வழங்கப்படுகிறது என்று பனேட்டா கூறினார்.
இதுவரை ஏவுகணை எதிர்ப்பு அமைப்பிற்கு 20 கோடிக்கும் அதிகமான டாலர் தொகையை அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளது. இஸ்ரேலின் முழுமையான பாதுகாப்பை உறுதிச்செய்ய வருடந்தோறும் அளிக்கும் 310 கோடி டாலர் தொகையை தவிர தனியாக இத்தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment