Thursday, May 17, 2012

‘மோகன் பாகவத்தை சந்தித்தது கூட கிடையாது’- அன்னா ஹஸாரே!


No truck with RSS, have never met Bhagwat- Hazare
நாக்பூர்:ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை எனக்கு தெரியாது. அவரை நான் சந்தித்தது கூட கிடையாது என்று அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்னா ஹஸாரே கூறியது: ‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உதவியை ஒருபோதும் நாடியது கிடையாது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. அவரை நான் சந்தித்தது கூட கிடையாது.ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்திற்கு மோகன் பாகவத் ஆதரவு அளிப்பதாக அறிவிக்க கூடாது.
ஊழல் புரிந்துள்ள 14 அமைச்சர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். பதில் கிடைத்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி அரசிடம் முறையிடுவோம். எதுவும் நடக்கவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக பிரசாரத்தைத் தொடங்குவோம்’ என்றார் ஹஸாரே.

No comments:

Post a Comment