
டக்கா:பிரபல எழுத்தாளர் ஹிமாயூன் அஹ்மதின் அரசியல் நாவலான தையாலி(சுவர்) வெளியிடுவதற்கு பங்களாதேஷ் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
1975-ஆம் ஆண்டு ராணுவ புரட்சியில் பங்களாதேஷின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜீபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் வரலாற்று உண்மைகளை திரித்து கூறியிருப்பதால் தடை விதிப்பதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இந்த விபரங்களை திருத்தும் வரை இத்தடை தொடரும்.
முஜிபுர் ரஹ்மான் கொலை தொடர்பான சம்பவத்தைக் குறித்து முதன் முதலில் வெளியான நாவலான தையாலியில் கூறப்படும் தகவல்கள் எதிர்கால தலைமுறைக்கு தவறான செய்தியை அளிப்பதாக அட்டர்னி ஜெனரல் மஹ்பூபே ஆலம் வாதிட்டார்.
No comments:
Post a Comment