தர்மபுரி: மினிலாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 71 ஜெலட்டின் ரோல்கள், 20 ஆயிரம் டெட்டனேட்டர் குப்பிகள் உள்ளிட்ட பயங்கர வெடிபொருட்களைக் காவல்துறையினர் வாகன சோதனையின் போது கைப்பற்றியுள்ளனர். இதனால் அரூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் வழியாக சேலத்துக்கு வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின்பேரில் அரூரில் நேற்று காலை காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனையின்போது, மினிலாரி ஒன்றில் சுமார் ஒரு அடி உயரத்துக்கு ரகசிய அறை உருவாக்கப்பட்டு இருப்பதைக் காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த மினிலாரியில் நடத்தப்பட்ட சோதனையில் ரகசிய அறைக்குள் 71 ஜெலட்டின் ரோல்கள், 500 மீட்டர் வயர்கள், 20 ஆயிரம் டெட்டனேட்டர் குப்பிகள் உள்ளிட்ட பயங்கர வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த வெடிபொருட்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் மினிலாரியின் ஓட்டுனரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் மினி லாரி ஓட்டுனர், திருப்பத்தூரைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், திருப்பத்தூரில் இருந்து சேலத்துக்கு இந்த வெடிபொருட்களைக் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. மேலும், அந்த மினிலாரி சேலத்க்ச் சேர்ந்த சங்கர் என்பவருக்குச் சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.

மிக அதிக அளவில் கைப்பற்றப்பட்ட இந்த வெடிபொருள்கள் குறித்து தகவல் கிடைத்ததும் சேலம் சரக டி.ஐ.ஜி. சஞ்சய்குமார், தர்மபுரி மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அமீத்குமார்சிங், துணை சூப்பிரண்டு சம்பத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை பார்வையிட்டனர்.
இதையடுத்து பயங்கரவாத செயல்களுக்காக இந்த வெடிபொருட்கள் கடத்திச் செல்லப்பட்டனவா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தலைமறைவான மினிலாரியின் உரிமையாளர் சேகரைக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள். பயங்கர வெடிபொருட்கள் சிக்கிய இச்சம்பவம் அரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment