Tuesday, May 22, 2012

பாகிஸ்தானில் ட்விட்டருக்கு தடை!


Twitter website blocked in parts of Pak
இஸ்லாமாபாத்:இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபியை அவமதிக்கும் கருத்துக்களை அகற்ற மறுத்த காரணத்தால் ட்விட்டர் இணையதளத்திற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் அவரது உருவத்தை கற்பனையில் ஃபேஸ்புக்கில் பரிந்துரைப்பதை போட்டியாக ஊக்குவித்தது ட்விட்டர். இந்த போட்டிக்கு எழுந்த கடும் எதிர்ப்புகளை கவனத்தில்கொள்ள ஃபேஸ்புக் ஒப்புக்கொண்டது. ஆனால், ட்விட்டர் அதற்கு உடன்படவில்லை. இறைத்தூதரை உயிரினும் மேலாக நேசிக்கும் முஸ்லிம்களுக்கு ட்விட்டரின் இந்த செருக்கு காயத்தை ஏற்படுத்தியது.
இதுத்தொடர்பாக பல தடவை ட்விட்டரை அணுகிய பொழுதும் மறுதலிக்கும் போக்கையே ட்விட்டர் மேற்கொண்டது என பாகிஸ்தான் தொலைத்தொடர்பு தலைவர் முஹம்மது ஜஸீன் கூறுகிறார். இதனைத் தொடர்ந்தே ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதரை அவமதிக்கும் கருத்துக்களை நீக்கம் செய்தால் தடை விலக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment