Tuesday, May 22, 2012

நீதிபதிகளுக்கு எதிரான 60 புகார்கள் நடவடிக்கைக்கு ஒப்படைப்பு!


Law Min forwarded at least 60 complaints against judges
புதுடெல்லி:கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் மீது அளிக்கப்பட்ட 60 புகார்களில் நடவடிக்கை எடுக்க மத்திய சட்ட அமைச்சகம் அவற்றை முதன்மை நீதிபதிகளிடம் ஒப்படைத்துள்ளது.
தகவல் அறியும் உரிமை ஆர்வலர் சுபாஷ் அகர்வால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி அளித்த மனுவில் நீதிபதிகளின் விபரங்களை சட்ட அமைச்சகம் வெளியிட்டது. வெளியிட்டுள்ள 60 புகார்கள் தவிர மாவட்ட நீதிபதிகள், ஜூடிஸியல் அதிகாரிகள், கீழ் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியவர்களுக்கு எதிரான புகார்களும் அந்தந்த மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.
சட்ட அமைச்சகம் அளித்துள்ள தகவலில், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான 11 புகார்கள் பீகார் மாநில பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கிடைத்த 11 புகார்களில் ஏழு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரானவையாகும். உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதிளுக்கு எதிராகவும் 4 புகார்கள் உள்ளன.
மத்திய கண்காணிப்பக ஆணையர் மூலமாக சட்ட அமைச்சகம் 3 புகார்களை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment