Wednesday, April 25, 2012

* முகப்பு * செய்திகள் » o இந்தியா o உலகம் o தொழில்நுட்பம் o விளையாட்டு o ஆரோக்கியம் * விமர்சனங்கள் * தொடர்கள் » o மனதோடு மனதாய் o மீடியா உலகில் முஸ்லிம்கள் o வரலாற்றின் வேர்கள்! o இனிக்கும் இல்லறம் * கட்டுரைகள் » o இஸ்லாம் o சிந்தனைக்கு o பொது கட்டுரைகள் * மற்றவை » o கேலரி » + கேலிச்சித்திரம் + புகைப்படம் + வீடியோ o இதழ்கள் » + கிழக்கு வானம் + புதிய தேசம் + பாலைவனத் தூது + நிஜங்கள் o இது உங்க ஏரியா o வாக்கெடுப்பு o விளம்பரங்கள் o சிறு விளம்பரங்கள் * எங்களைப் பற்றி * தொடர்புக்கு கிறிஸ்தவ பாதிரியாரை விடுதலைச் செய்யாவிட்டால் திருக்குர்ஆன் பிரதியை எரிப்பேன் – டெர்ரி ஜோன்ஸ் கொக்கரிப்பு!


terry jones An American Christian preacherவாஷிங்டன்:ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ பாதிரியார் யூஸஃப் நதகானியை ஈரான் விடுதலைச் செய்யாவிட்டால் திருக்குர்ஆன் பிரதியை எரித்து, முஹம்மது நபியின் படத்தை வரையப் போவதாகவும் வெறிப்பிடித்த அமெரிக்க கிறிஸ்தவ பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் கூறியுள்ளான்.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கப்போவதாக அறிவித்து சர்ச்சையில் சிக்கிய டெர்ரி ஜோன்ஸ், வருகிற 28-ஆம் தேதி ஐந்து மணிக்கு முன்பு யூஸஃப் நதகானியை விடுதலைச்செய்ய வேண்டும் என்று கெடு விதித்துள்ளான். ஸ்டான் அப் அமெரிக்கா நவ் என்ற டெர்ரி ஜோன்ஸின் இணையதளத்தில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதை தொடர்ந்து மரணத்தண்டனை விதிக்கப்பட்டு நதகானி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நதகானியை கொலைச் செய்யவோ அல்லது விடுதலைச் செய்யாமல் இருந்தாலோ உலகில் அனைவரும் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கவேண்டும் என்று ஜோன்ஸ் அழைப்பு விடுத்துள்ளான்.

No comments:

Post a Comment