Wednesday, April 25, 2012

ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களுக்கு பாரபட்சம்: ஆம்னஸ்டி!


Prejudice robs Europe's Muslims of basic choicesப்ரஸ்ஸல்ஸ்:முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பாரபட்சம் நிலவுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் ப்ரஸ்ஸல்ஸில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இத்தகைய பாரபட்சங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவும், முன்னரே தீர்மானிப்பதை கைவிட வேண்டும் என்றும் ஆம்னஸ்டி ஐரோப்பிய நாடுகளின் அரசுகளை வலியுறுத்தியுள்ளது.
பிரான்சு, ஸ்பெயின், நெதர்லாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையின் பெயரால் முஸ்லிம்கள் கல்வித்துறை, தொழில் துறை உள்ளிட்டவைகளில் முஸ்லிம்கள் கடுமையான பாரபட்சங்களுக்கு இலக்காக மாறுகின்றார்கள் என்று ஆம்னஸ்டி சுட்டிக்காட்டுகிறது.
முஸ்லிம்களையும், முஸ்லிம் நாடுகளின் குடிமக்களையும் ஒடுக்க திட்டமிட்டு தனியாக அரசியல் அமைப்புகள் கூட ஐரோப்பாவில் உருவாகியுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
மத சுதந்திரம் என்ற அடிப்படை உரிமை ஐரோப்பாவில் அழித்தொழிக்கப்படுகிறது. சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு பொருந்தாத உரிமை மீறல்களை முஸ்லிம்கள் அனுபவித்து வருகின்றார்கள் என்று ஆம்னஸ்டியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

No comments:

Post a Comment