Wednesday, April 25, 2012

மின்னஞ்சல் உளவு:ஸ்கை நியூஸ் மீது விசாரணை!

Sky News E-Mail Hack Broke Criminal Law
லண்டன்:பரபரப்பான செய்திகளுக்காக தனி நபர்களின் மின்னஞ்சல்களை ரகசியமாக உளவுப் பார்த்த ஊடக முதலை ருபர்ட் மர்டோக்கின் ஸ்கை நியூஸ் மீது விசாரணை நடைபெற உள்ளது. 3 நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளை ரகசியமாக உளவுப் பார்த்ததை இம்மாதம் துவக்கத்தில் சேனல் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
ஜான் டார்வின் அவரது மனைவி ஆனி உள்பட 3 நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளை ரகசியமாக உளவுப் பார்த்துள்ளது ஸ்கை நியூஸ். ஆனால், இந்நடவடிக்கை பொது நலனை கருதி என்றும், பொறுப்பான ஊடக பணியை தாங்கள் மேற்கொள்வதாகவும் ஸ்கை நியூஸ் கூறுகிறது.
இவ்வழக்கில் வாக்குமூலம் அளிக்க சேனலின் தலைவர் ஜான் ரிலேயை விசாரணைக்குழு அழைக்கும் என கருதப்படுகிறது.

No comments:

Post a Comment